மொரட்டுவை, கல்கிசை - சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (20) இரவு 8.20 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரைக் குறிவைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய பொலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
