‘சிரிலிய சவிய’ நிதி மோசடி தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில், தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில் அவர் இந்த முன் பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு கடந்த 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இது தொடர்பான விளக்கங்களை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஷிரந்தி ராஜபக்ஷவின் முன் பிணை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதற்கிடையில், ‘சிரிலிய சவிய’ நிதி மோசடி தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
