கல்வி என்பது நமது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான தூண் என்பதால், கல்வித்துறைக்கு எப்போதும் அரசாங்கம் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகத் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வதுடன், அதற்கான முறையான பிரதிபலிப்பையும், தரமான கல்வி முறையை மேம்படுத்துவதற்கான மனித மற்றும் பௌதீக வளங்களை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கம் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல், ஆசிரியர்களின் எண்ணிக்கையை முறைப்படுத்துதல் மற்றும் மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கல்விசார் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற பலநூறு திட்டங்கள் ஊடாக நாட்டின் எதிர்கால சந்ததியினரை வலுவானவர்களாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
