நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ஜுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைச் செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் என்பவரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, அதனை மேலதிக விசாரணைக்காக டிசம்பர் 16ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
