கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேக்கு சிகிச்சையளிக்கும் 10 மருத்துவர்களை எதிர்வரும் அக்டோபர் 6-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுரேஷ் சலேக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவக் குழுவில் இடம்பெற்றுள்ள 10 மருத்துவர்களுக்கே, அக்டோபர் 6-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பசான் அமரசேன இந்தக் கட்டளையைப் பிறப்பித்துள்ளார் என தமிழ் பிளஸ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மோஷன் ஒன்றின் ஊடாக முன்வைக்கப்பட்ட காரணங்களை பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.