கேட்டால் நீங்களே கவலைப்படுவீர்கள்!



கடந்த ஆண்டில் (2025 அக்டோபர் 30 முதல் இன்று வரை) நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் தடுப்புச் சோதனைகளில் 9,000க்கும் அதிகமான சிறுவர்களும் இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக 8 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் கைது செய்யப்பட்டவர்களுள் அடங்குவது பெரும் கவலையளிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

'உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் வேளையில், 2025 அக்டோபர் 30 முதல் நேற்று வரையிலான காலப்பகுதியில் பல்வேறு போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 8 முதல் 21 வயதுக்குட்பட்ட 9,105 சிறுவர்களையும் இளைஞர்களையும் நாங்கள் கைது செய்ய வேண்டியேற்பட்டது என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவர்களில் 8,932 பேர் ஆண் இளைஞர்கள், 173 பேர் இளம் பெண்கள், மேலும் 11 பேர் 8 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவர்.'


Post a Comment