'டித்;வா' சூறாவளியின் தாக்கம் காரணமாக சுமார் 10 மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மலையக ரயில் பாதையின் ரயில் சேவைகள், கொழும்பு கோட்டையிலிருந்து பேராதனை மற்றும் கம்பளை வரை மீண்டும் இயக்கப்பட்டுள்ளன.
சூறாவளியைத் தொடர்ந்து, ரம்புக்கனை, கண்டி மற்றும் பதுளை பகுதிகளுக்கிடையிலான மலையகப் பாதையிலான ரயில் சேவைகள் முற்றிலுமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
நேற்று வரை ரம்புக்கனை ரயில் நிலையம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், ரயில்வே திணைக்களம பேராதனை மற்றும் கம்பளை வரை சேவைகளை நீட்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று காலை 5:55 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து 'பொடி மெனிகே' ரயில் புறப்பட்டது.
இருப்பினும், இது ஒரு சோதனைச் சேவையாக இயக்கப்பட்டதால் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
ரயில்வே திணைக்களம் மற்றும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடன், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ரம்புக்கனை ரயில் நிலையத்திலிருந்து இந்த ரயிலில் பயணம் செய்தார்.
ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் பங்களித்த பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களும் இந்த சோதனை ரயிலில் பயணித்தனர்.
பேராதனை ரயில் நிலையத்தை வந்தடைந்த ரயிலை வரவேற்பதற்காக அங்கு சிறப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த 'பொடி மெனிகே' ரயில் பேராதனையிலிருந்து கம்பளை ரயில் நிலையம் வரை தனது பயணத்தை தொடர திட்டமிடப்பட்டுள்ளது.