பொரளை பகுதியில் உள்ள டி.எஸ். சேனாநாயக்க – மொடல் ஃபார்ம் வீதி சந்திப்புக்கு அருகில், கழிவுநீர் குழாய் சேதமடைந்துள்ளதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஏற்படும் போக்குவரத்து தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து நிலைமை சீராகும் வரை, சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துவதுடன், தமது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
