இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சிற்றுண்டிகள் (Short Eats) மற்றும் பராட்டா ஆகியவற்றின் விலைகளையும் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (21) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை உணவகங்கள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான், குறித்த உணவுப் பொருட்களின் விலைகளைச் சிறியளவில் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், பணிப்பாளர் சபைக் கூட்டத்தின் பின்னர் விலை அதிகரிப்பு தொடர்பான துல்லியமான விபரங்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
