இதேவேளை, சுகீஷ்வர பண்டாரவின் வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளதாக, இன்று (21) கோட்டை நீதவான் பசன் அமரசேன குறித்த உத்தரவை வாசித்துத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது மனைவியின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட ஏனைய கணக்குகள் தொடர்பான அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட வங்கிகளின் அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த கணக்குகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு, அதன் அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, சுகீஷ்வர பண்டார எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
.webp)