7 மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம்!

இலங்கையின் 7 மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, மத்திய, சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று (21) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு, நாளை (22) அதிகாலை 1.30 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment