நிலத்தகராறு - அண்ணனின் கதையை முடித்த தம்பி

நிலத்தகராறு காரணமாக மூத்த சகோதரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் உயிரிழந்தவரின் 49 வயதுடைய தம்பியைப் பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் மீட்டியகொட பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் திடீரெனக் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்து, அவரது மகள் 2021ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பின்னர், காணாமல் போனவரின் சடலம் அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மீண்டும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் விளைவாக, ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரைக் கைது செய்தபோது, கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரும்புக் கம்பி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பாலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment