களு கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, களவெல்லாவ பிரதேசத்தில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இன்று (12) காலை நிலவரப்படி, மில்லகந்த நீர்மட்ட அளவீட்டு நிலையத்தில் களு கங்கையின் நீர்மட்டம் 5 மீற்றரைத் தாண்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், களு கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ந்து பெய்யும் மழையால் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
.jpg)