முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (12) காலை உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், கடந்த சில நாட்களாக அவர் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், தற்போது அவருக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஆகியோரைச் சந்திப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்குச் செல்ல அவர் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
எனினும், அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை தொடர்பான தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் கிடைத்த பின்னரே மேலதிக விபரங்களை உறுதியாகத் தெரிவிக்க முடியும்.
