இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சந்திம வீரக்கொடி, சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் இன்று (12) இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளனர்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய சாட்சியமளிப்பதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.

இதேவேளை, ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று காலை முன்னிலையானார்.

நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment