மக்களே உயிரை குடிக்கும் மின்னல் அழகி-சற்று முன் வெளியான அறிவிப்பு

 

வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, குறித்த எச்சரிக்கை நாளை (05) அதிகாலை 01.00 மணி வரை செல்லுபடியாகும். 

இப்பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. 

இதனிடையே மத்திய, சப்ரகமுவ, மேல், தென், ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

மேலும், மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment