கொட்டாஞ்சேனையில் அதிரடி கைது! 31 வயது பெண் சிக்கினார்


 கொட்டாஞ்சேனை, மாதம்பிட்டி பகுதியில் 'ஐஸ்' போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதம்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 520 கிராம் 150 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment