அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! – ஒக்டோபர் 29 வரை அவகாசம்

 

தேசிய அடையாள அட்டை (NIC) அல்லது வங்கிக் கணக்கு விபரங்கள் இல்லாத காரணத்தால் அஸ்வெசும கொடுப்பனவுகளைப் பெறாதவர்கள், தங்களுக்குத் தேவையான ஆவணங்களை ஒக்டோபர் 29ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு முதல் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளைப் பெற தகுதியானவர்களை அடையாளம் காண மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொட்டவலகெதர தெரிவித்துள்ளார்.

இதன்படி, புதிய அஸ்வெசும பயனாளர்களின் பட்டியல் விரைவில் பிரதேச செயலக மட்டத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

முன்னைய பட்டியலில் இடம்பெற்றிருந்தும், தேவையான ஆவணங்கள் இல்லாததால் கொடுப்பனவுகளைப் பெற முடியாதவர்களுக்கு, புதிய பட்டியல் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் தங்களுக்கான கொடுப்பனவுகளைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment