ரத்த வெள்ளத்திலும் விமானத்தை கட்டுப்படுத்திய கேப்டன்! – 174 உயிர்கள் தப்பின

செப்டம்பர் 30ஆம் திகதி... துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி 174 பயணிகளுடன் அமைதியாகப் பறந்துகொண்டிருந்தது அந்தப் பிளைதுபாய் (Flydubai) போயிங் விமானம். விமானத்தின் உள்ளே எந்தவிதமான அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்ற விழிப்புணர்வுடன் எனது இருக்கையில் அமர்ந்திருந்த எனக்கு, நடுவானில் அந்த அதிர்ச்சிகரமான பயங்கரத் தாக்குதல் அரங்கேறும் வரை அங்கு என்ன நடக்கிறது என்பதே தெரிந்திருக்கவில்லை.

விமானத்தை மிகத் திறம்படச் செலுத்தி வந்த இந்தியக் கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி ஆகியோர் காக்பிட்டிற்குள் (Cockpit) இருந்தபோதுதான் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தன்று, ஓமானிய துணை விமானி தான் நமாஸ் செய்யப் போவதாகக் கூறித் தனது இருக்கையை விட்டு எழுந்துள்ளார்.

சக விமானியின் மத நம்பிக்கைக்கு மரியாதை அளிக்கும் விதமாக, கேப்டன் ஸ்மித் மச்சார் பின்னணியில் என்ன நடக்கிறது எனத் திரும்பிப் பார்க்காமல் முன்னோக்கிப் பார்த்தவாறே விமானத்தைச் செலுத்தியுள்ளார். ஆனால், நான்கு முதல் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, விமானத்தில் அவசர காலத்திற்காக வைக்கப்பட்டிருந்த கோடரியை எடுத்த அந்தத் துணை விமானி, கொஞ்சமும் மனிதநேயமின்றி கேப்டன் ஸ்மித்தின் தலையின் பின்புறம் பலமாக வெட்டியுள்ளான்.

ஆரம்பத்தில்விமானத்தில் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுவிட்டதாகவே பயணிகள் நாங்கள் அனைவரும் கருதினோம். ஆனால், அடுத்தடுத்த கோடாரி வெட்டுகளுக்குப் பிறகே அது சக விமானியால் பின்னாலிருந்து மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது.

தாக்குதலில் பார்வை மங்கி, ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த நிலையிலும், விமானம் மிக வேகமாக கீழ்நோக்கிச் செல்வதை உணர்ந்த கேப்டன் ஸ்மித், தமக்கு ஏற்பட்ட வலியைப் பொருட்படுத்தாமல் 174 பயணிகள் மற்றும் பணியாளர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தனது வாழ்வுக்கான போராட்டத்தைத் தொடங்கினார்.

கடுமையான காயங்களுடன் காக்பிட் கதவின் கைப்பிடியைச் (Knob) சுழற்றி கதவைத் திறக்க முயன்றார் கேப்டன் ஸ்மித். ஆனால், தாக்குதல் நடத்தியவன் கதவை மீண்டும் பூட்டி அவரைத் தள்ளிவிட்டான்.

“கடைசியாக ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கிறது; எழுந்திருக்காவிட்டால் இத்தனை பேரின் உயிரும் போய்விடும்” என்று மனதிற்குள் உறுதிகொண்ட ஸ்மித், தனது முழு பலத்தையும் திரட்டி மீண்டும் எழுந்து போராடி கதவைத் திறந்தார். வெளியே என்ன நடக்கிறது என அறியாமல் தயார்நிலையில் இருந்த சக பணியாளர்களும் பயணிகளும் உடனடியாக காக்பிட்டிற்குள் பாய்ந்து சென்று அந்தத் தீவிரவாதியை மடக்கிப் பிடித்தனர்.

இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஐக்கிய அரபு அமீரகத்தில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் ஸ்மித்துடன் காணொளிக் காட்சி (Video Conference) மூலம் உரையாடினார். அதற்கு முந்தைய நாள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடமும் ஸ்மித் பேசினார்.

பிரதமர் மோடியிடம் பேசிய கேப்டன் ஸ்மித்,“எனக்கு 17 ஆண்டுகள் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது. கண்கள் மூடிய நிலையிலும் விமானத்தின் நிலையைக் கணிக்கும் திறன் எனக்கு இருந்தது. அந்த மரணப் போராட்டத்தின் போது மனதிற்குள் அனுமன் சாலீசாவை பாராயணம் செய்தேன். அந்த அனுமனின் அருள்தான் எனக்குத் துணிவையும் பலத்தையும் தந்தது,என உணர்ச்சிவசப்பட்டுத் கூறினார்.

கேப்டன் ஸ்மித்தின் ஒப்பற்ற வீரத்தைப் பாராட்டிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அவரை “இஸ்ரேல், இந்தியா மற்றும் உலகத்தின் நாயகன்” எனப் புகழாரம் சூட்டியதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கேப்டன் ஸ்மித் மச்சாரை இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்குமாறு சிறப்பு அழைப்பும் விடுத்துள்ளார். ஒரு விமானப் பயணியாக, மரணத்தின் விளிம்பு வரை சென்று எங்களை மீட்ட அந்த மாவீரனின் நினைவுகள் இன்றும் எங்களைச் சிலிர்க்க வைக்கின்றன.

Post a Comment