Posts

அனுர vs மஹிந்த – சூடான அரசியல் களம்

 


வடமத்திய மாகாணத்தில் ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆகியவை ஏற்பாடு செய்துள்ள இரண்டு பிரமாண்ட பேரணிகளால் அரசியல் களம் சூட பிடித்துள்ளது.

பொலன்னறுவை தீப உயன பகுதியில் தேசிய மக்கள் சக்தி நடத்தும் விவசாயிகளின் பேரணியில், அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார்.

அதேவேளை, அநுராதபுரம் மாநகர சபை மைதானத்தில் பொதுஜன பெரமுனவின் 'ஜன சடன' பேரணி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

விமானக் கொள்முதல் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ விளக்கப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அநுராதபுர பேரணி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 

இரு தரப்பும் தங்களது பலத்தைக் காட்ட முயல்வதால் இந்த பேரணிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Post a Comment