ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு எதிராகச் சாவகச்சேரியில் இன்று காலை மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சாவகச்சேரி பேருந்து நிலைய வளாகத்தில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அநுர அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு எந்தவிதமான முன்னேற்றகரமான திட்டங்களையும் செயல்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டியே இப்போராட்டம் நடத்தப்படுகிறது.
அரசியல் கைதிகளின் விடுதலை, ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைத்தல், செம்மணி புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோருதல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழரசு கட்சியின் எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட பல முக்கிய தமிழ் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
