யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் கடந்த புதன்கிழமை இரவு குடும்பஸ்தர் ஒருவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துன்னாலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான குடும்பஸ்தரே முன்பகை காரணமாக மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழுவினரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சந்தேகநபர்கள் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், தலைமறைவாக உள்ள பிரதான சந்தேகநபரைப் பிடிக்கப் பொலிஸார் வலைவீசியுள்ளனர்.
