இலங்கையில் சட்டவிரோதச் செயல்களுக்காக மொபைல் சிம் (SIM) அட்டைகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், புதிய சிம் அட்டைகளை பெறுவதற்கான நடைமுறைகளைக் கடுமையாக்கத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) தீர்மானித்துள்ளது.
நாட்டில் தற்போது 3 கோடிக்கும் அதிகமான சிம் அட்டைகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், புதிய இணைப்பு பெறும்போது நேரடிப் நிழற்படம் (Live Photograph) மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்தும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தற்போது ஒரு தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி ஒரு நிறுவனத்திடம் 5 சிம்கள் வீதம், 3 நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 15 சிம் அட்டைகள் வரை பெற முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது தொலைபேசி இலக்கத்தை மாற்றாமல் வேறு தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் மாறும் 'நம்பர் போர்ட்டபிலிட்டி' (Number Portability) சேவையை அறிமுகப்படுத்தும் பணிகளும் தொடர்கின்றன.
அத்துடன், தொலைத்தொடர்பு வசதி குறைந்த பகுதிகளுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் சேவையை விரிவுபடுத்தவும், கடந்த 2025-இல் அறிமுகமான 5G சேவையை மேலும் மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
