எரிபொருள் விலை உயருமா? வெளியான தகவல்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலையை உடனடியாக உயர்த்தப் போவதில்லை என இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பதற்றங்கள் மற்றும் செங்கடல் பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடிகள் காரணமாக உலகச் சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் (Brent crude) ஒரு பேரல் 104 டொலரையும், WTI மசகு எண்ணெய் 100 டொலரையும் தாண்டி விற்பனையாகி வருகிறது.

இது தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடி, இம்மாத இறுதியில் வழக்கமான விலை திருத்தத்தின் போது அடுத்தகட்ட தீர்மானம் அறிவிக்கப்படும் என CPC தலைவர் D.J. ராஜகருண தெரிவித்துள்ளார். 

மேலும், சில தனியார் விநியோகஸ்தர்கள் டீசல் விற்பனையைக் கட்டுப்படுத்தியபோதிலும், Ceypetco நிரப்பு நிலையங்களில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

Post a Comment