முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு தற்போது வாக்குமூலத்தை பதிவு செய்து வருகிறது.
துபாயில் இருந்து சமீபத்தில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாஸிக் தொடர்பான விசாரணைக்கு இந்த விசாரணை தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணையின் ஒரு பகுதியாக, அருந்திக்க பெர்னாண்டோவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் அவரிடமிருந்து புலனாய்வாளர்கள் வாக்குமூலம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
