27 வயது இளைஞரை பலியெடுத்த உழவு இயந்திரம்

கொங்ரீட் கற்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் பின் பகுதியில் (ட்ரெய்லர்) பயணம் செய்த இளைஞர் ஒருவர், உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை பதிவானதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததனை தொடர்ந்து, அதில் காணப்பட்ட கொங்றீட் கற்கள் குறித்த நபர் மீது விழுந்தமையினால் படுகாயமடைந்துள்ளார்.

இந்த நிலையில் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சியம்பலாண்டுவ, சூரியதலாவை பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 27 வயதுடைய ஜி.எச். பிரசன்ன மதுசங்க என்பவரே உயிரிழந்துள்ளார்.

Post a Comment