“எதிர்க்கட்சியின் பலவீனம் வெளிப்படுகிறது!” – அமைச்சர் அதிரடி

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்துவது பாரதூரமான விடயம் எனக் குறிப்பிட்டார்.

நீதிமன்றத் தீர்ப்புக்கு அமையவே 22ஆவது திருத்தம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயக முறையில் போராட்டங்களை நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை இருப்பதால், எதிர்க்கட்சியின் போராட்டங்களில் அரசாங்கம் தலையிடாது எனவும் அமைச்சர் கூறினார்.

அதேவேளை, எதிர்க்கட்சியினர் போராட்டங்களை முன்னெடுக்கட்டும், அரசாங்கம் நாட்டின் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையை விரிவுபடுத்துவதற்காக 1 இலட்சத்து 20 ஆயிரம் பேரை புதிதாக இணைத்துக்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் குற்றவாளிகள் இருப்பது உறுதியானால், அவர்களுக்கும் சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment