மலையகத்தின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் தற்போது நீர்வழிந்து ஓடத் தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் நீர்த்தேக்கங்களுக்கு கிடைக்கும் நீரின் அளவு அதிகரித்துள்ளதுடன், அவற்றின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகின்றது.
விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்ததையடுத்து, அதன் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேறத் தொடங்கியுள்ளது.
இதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ்பகுதியில் வசிக்கும் மக்கள் தற்போதைய நிலைமை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


.jpeg)