நாளை விசேட விடுமுறை

 

தொடர்ந்து பெய்துவரும் கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, வத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு நாளை (25) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நெல்லிமலை, ஹுலங்கந்த மற்றும் தனியார் தோட்டப் பகுதிகளில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக, மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் வழியிலுள்ள பாலம் சேதமடைந்துள்ளதுடன், ஆற்றின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

மேலும், பன்விலை - கபரகல பிரதான வீதியிலிருந்து நெல்லிமலை அரச பெருந்தோட்டப் பகுதிக்குச் செல்லும் வீதியில் மண்சரிவு ஏற்பட்டு, சேறும் சகதியுமாக காணப்படுவதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயணிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனுடன், பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து விழுதல், அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுதல் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பாடசாலை நிர்வாகம் வத்தேகம கல்வி அலுவலகத்துடன் கலந்துரையாடி இந்த விசேட விடுமுறை வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர் நிலவும் காலநிலையை கருத்திற்கொண்டு அவதானத்துடனும் பாதுகாப்புடனும் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

Post a Comment