நாமலின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை கொதித்தெழுந்த சாகர காரியவசம்

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான எந்தவொரு ஆவணத்திலும் அல்லது குறிப்பிட்ட திகதி மற்றும் இடத்திலும் நாமல் ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பின்னர், வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரிடம் 13 வருடங்களுக்குப் பின்னர் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான மின்னஞ்சல்களிலும் நாமல் ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும், நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனிடையே, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

Post a Comment