எவரையும் நம்பாத உயர்நீதிமன்றம் - இரகசியமாக சபாநாயகருக்கே வழங்கியது

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சபாநாயகரினால் குறித்த தீர்மானம் எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதி 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அவர்களினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, குறித்த சட்டமூலத்திற்கு சவால் விடுத்து உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், தலைமை நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம், சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த தீர்மானத்தை சபாநாயகருக்கு அனுப்புவதாக அறிவித்தது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு அண்மையில் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment