இன்று (21) காலை 7 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில், அதிகளவிலான மழைவீழ்ச்சி கேகாலை மாவட்டத்தின் மாலிபோட பகுதியில் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, அங்கு 104 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதற்கு மேலதிகமாக, கேகாலை மாவட்டத்தின் களுபஹன பகுதியில் 95.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், நுவரெலியா, மஸ்கெலியா பகுதியில் 85.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
