வாழைச்சேனை - வாகனேரி பகுதியில் யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (21) காலை 6.15 மணியளவில், இடம்பெற்றுள்ளது.
யானை தாக்கிய சம்பவத்தில், வாகனேரி பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஜீ. மனோகரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்;தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
