பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, சற்று நேரத்திற்கு முன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
பிரதிவாதி விமல் வீரவன்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணி மஞ்சுள பதிராஜ நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில், தனது கட்சிக்காரரின் வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே அவரால் குறித்த நேரத்திற்கு நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனதாகத் தெரிவித்தார்.
அதற்கமைய, அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையைத் (வாரண்ட்) திரும்பப் பெறுமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இருப்பினும், இந்த கோரிக்கையை நாளை (22) மோஷன் மனுவொன்றின் ஊடாக சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு தலைமை மேஜிஸ்திரேட் அசங்க எஸ். போதரம உத்தரவிட்டார்.
