நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (21) 38 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம், தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் கல்வி பாடசாலை அதிபர்கள் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, இன்று காலை 9.00 மணி நிலவரப்படி மத்திய மாகாணத்தில் 35 பாடசாலைகளும், சபரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களில் தலா ஒரு பாடசாலை வீதமும் என மொத்தம் 38 பாடசாலைகள் இன்று இயங்காது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
