தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு 3ஆம் கட்ட (சிவப்பு) நிலச்சரிவு அபாய எச்சரிக்கையை விடுடுத்துள்ளது.
கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, அரநாயக்க, தெரனியகல, மாவநெல்ல மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த 3ஆம் கட்ட நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, அம்பகமுவ மற்றும் நோர்வுட் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிலச்சரிவு தொடர்பான அறிகுறிகளாக கற்பாறைகள் சரிவு, நில வெடிப்பு, போன்றவைகள் காணப்பட்டால் அப்பகுதியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
.jpg)