உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் செப்டம்பர் 24 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் அதிபர்களுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைத் திகதிகள்:

நடனம், இசை & நாடகம் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) - செப்டம்பர் 24 முதல் ஒக்டோபர் 03 வரை.

பொறியியல் தொழில்நுட்பவியல் - செப்டம்பர் 30 முதல் ஒக்டோபர் 10 வரை.

மனைப் பொருளியல் (Home Economics) - ஒக்டோபர் 10 முதல் ஒக்டோபர் 20 வரை.

Biosystems Technology - ஒக்டோபர் 17 முதல் ஒக்டோபர் 21 வரை.

பரீட்சார்த்திகள் தொடர்புடைய பரீட்சை தொடங்குவதற்கு 7 நாட்களுக்கு முன்பிருந்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும். 

மேலதிக விபரங்களுக்கு 1911 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ளலாம்.

Post a Comment