சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் ஹற்றன் கல்வி வலயங்களுக்குட்பட்ட 13 தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலப் பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா வலயத்திலுள்ள 156 பாடசாலைகளில் 4 பாடசாலைகளுக்கும், ஹற்றன் வலயத்திலுள்ள 150 பாடசாலைகளில் 9 பாடசாலைகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு, பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் வலயக் கல்விப் பணிப்பாளர்களினால் அதிபர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அதற்கமையவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், நுவரெலியா மற்றும் ஹற்றன் வலயங்களிலுள்ள ஏனைய பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
