இந்த ஆண்டு இறுதிக்குள் 1 இலட்சத்து 21 ஆயிரம் பேரை அரச சேவைக்கு புதிதாக நியமிக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
20ஆம் திகதி அக்குரஸ்ஸவில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை எனக் குறிப்பிட்ட அவர், இந்த புதிய ஆட்சேர்ப்பில் 10 ஆயிரம் பேர் பொலிஸ் துறையிலும், 23 ஆயிரம் பேர் ஆசிரியர் சேவையிலும் இணைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், அரச நிறுவனங்களின் தேவைகள் மற்றும் காலிப்பணியிடங்களை ஆராய்ந்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த வேலைவாய்ப்புகள் குறிப்பாக கிராமப்புற இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
.jpg)