ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நாளை தீர்ப்பு


ஏப்ரல் 21 ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்குச் சதித்திட்டம் தீட்டியமை, அதற்குத் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை (22) அறிவிக்கப்படவுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கிற்காக, முறைப்பாட்டாளர் தரப்பில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்தனர். 

தினமும் இடம்பெற்ற சாட்சி விசாரணைகளைத் தொடர்ந்து, முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சாட்சி விசாரணைகள் கடந்த ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி நிறைவு செய்யப்பட்டன.

நீண்ட சாட்சி விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 22ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் திகதி குறிப்பிட்டிருந்தது.


Post a Comment