ஒன்றுமே தெரியாததை போன்று மறைந்திருந்த கொலைகாரர்கள்
அத்துருகிரிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதியும், இந்த மாதம் 08ஆம் திகதியும் அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற இந்த இரண்டு கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே, குறித்த குற்றச் செயலைச் செய்த துப்பாக்கிதாரி மற்றும் சம்பவத்திற்கு உறுதுணையாக இருந்த மூவர் அடங்கலாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் , பண்டாரகம, மொரந்துடுவை மற்றும் அழுபோமுல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21, 24, 41 மற்றும் 45 வயதுடைய நபர்களாவர்.
அத்துடன், துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டு ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சந்தேகநபர் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு ஒன்றுக்காக பிடியாணை (Warrant) பிறப்பிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
