மின்சார விநியோகத்தில் எத்தகைய தடைகளும் இன்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு எந்தவிதமான சிக்கல்களும் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
2026 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகளுக்கான நிலக்கரியை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு ஏற்படும் எனப் பரவிவரும் பிரசாரங்கள் முற்றிலும் பொய்யானவை என, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு விஜயம் செய்திருந்த போது அமைச்சர் அனுர கருணாதிலக்க இதனை தெரிவித்தார்.
