கொழும்பு, மட்டக்குளி பகுதியில் இரண்டு இலட்ச ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மட்டக்குளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சுமார் 2 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,000 போதை மாத்திரைகளுடன் 35 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் மட்டக்குளி சமித்புர பகுதியைச் சேர்ந்தவராவார்.
அவரிடமிருந்து 1,000 போதை மாத்திரைகள் (மதிப்பு ரூ. 2 இலட்சம்) கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
