சற்று முன் குறைந்தது எரிவாயுவின் விலைகள்-இதோ புதிய விலைகள்

 

லிட்ரோ எல்.பி. எரிவாயு விலைகளில் குறைப்பு: புதிய விலை விவரங்கள் வெளியீடு

சர்வதேச சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் நாணய மாற்று விகித சவால்கள் நிலவியபோதிலும், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் செப்டம்பர் மாதத்திற்கான உள்நாட்டு எல்.பி. எரிவாயு விலைகளைக் குறைக்க லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, 2026 செப்டம்பர் 05 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பின் கீழ், 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,365 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் இதன் விலை 4,465 ரூபாவாக காணப்பட்டது.

அதேபோன்று, 1,792 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,750 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது. 

மேலும், 835 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 2.3 கிலோகிராம் எடையுடைய சிறிய வகை எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 815 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திற்குட்பட்ட வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய விலை திருத்தமானது, தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நுகர்வோருக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment