தங்கம் முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் துமிந்த திஸாநாயக்க மற்றும் பெண் பிரதிவாதி ஆகியோருக்கு இன்று (10) மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நபர் ஒருவருக்கு 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவர்களை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒக்டோபர் 02 ஆம் திகதி நடத்துவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.