ஹொரவபொத்தானை, இஹள கும்புகொல்லாவ பகுதியில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து 21 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் இஹள கும்புகொல்லாவ பகுதியைச் சேர்ந்த அமீர்தீன் முலவ்பர் சஹ்ரான் என்ற இளைஞராவார்.
கடந்த 24 ஆம் திகதி இந்த இளைஞர் தனது சகோதரியுடன் மாடுகளை மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார். அங்கு சகோதரியிடம் விறகுகளைக் கொடுத்துவிட்டு, தான் பின்னர் வருவதாகக் கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
எனினும், அவர் மீண்டும் வீட்டிற்குத் திரும்பாததால், பிரதேசவாசிகளும் உறவினர்களும் இணைந்து நடத்திய தேடுதலின் போது, கைவிடப்பட்ட இந்தக் கிணற்றில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சடலத்தில் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் ஹொரவபொத்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.