தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (26) திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் உனர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இதில் முன்னாள் போராளிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தமிழ் அரசியல் வாதிகள், பொதுமக்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டு திலீபனின் உருவப் படத்திற்கு மலர் தூவியும், விளக்கேற்றியும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதன்போது பொதுச்சுடரினை முன்னாள் போராளி ஒருவரின் தாயார் ஏற்றினார்.
திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக தொடர்ச்சியாக 12 நாட்கள் இடம்பெற்று வந்த அஞ்சலி நிகழ்வினைத் தொடர்ந்து இன்றைய தினம் (26) இறுதி நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.