இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு அசாமில் இருந்து 'சிவா' என்ற 5 வயது நிரம்பிய புதிய ஆண் யானை நன்கொடையாகக் கொண்டுவரப்பட்டு சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.
அசாமில் இருந்து பாரவூர்தி மூலம் கொண்டுவரப்பட்ட குட்டி யானை சிவாவிற்கு கிழக்கு ராஜகோபுரம் எதிரில் மலர் மாலை அணிவித்து தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகளுடன் கோவில் நிர்வாகமும் பக்தர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
யானையை நன்கொடையாக வழங்கியவர்கள் அதனிடம் விடைபெற்றுச் செல்ல முயன்றபோது 'சிவா' குட்டி யானை தனது துதிக்கையைக் கொடுக்க மறுத்துத் திரும்பி நின்றுகொண்டு கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு அங்கிருந்த பக்தர்களை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
முன்னரே உள்ள பெண் யானை இக்கோவிலில் ஏற்கனவே 'இராமலட்சுமி' என்ற பெண் யானை உள்ள நிலையில் தற்போது புதிய ஆண் யானையும் இணைந்துள்ளது.
வனத்துறையினரின் உரிய தடையின்மைச் சான்று மற்றும் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பின்னரே இந்த யானை அசாமில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.