கிங் கங்கை (Gin Ganga) மற்றும் களு கங்கையின் (Kalu Ganga) ஆகியவற்றிற்காக வெளியிடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது நிலவும் பலத்த மழை காரணமாக குறித்த ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையினாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குறித்த ஆற்றுப் படுகைகளின் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் குறிப்பாக கிளை வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
.jpg)