22ஆவது திருத்தத்திற்கு எதிராக 24ஆம் திகதி போராட்டம்! – திஸ்ஸ அத்தநாயக்க

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த அரசியலமைப்புத் திருத்தம் மக்கள் நலனுக்காக அல்லாமல், அரசாங்கத்தின் அதிகாரத்தை தக்கவைப்பதற்காக கொண்டுவரப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 22ஆவது திருத்தத்திற்கு எதிராக எதிர்வரும் 24ஆம் திகதி காலை 9 மணிக்கு பொல்தூவ சந்திப்பில் பாரிய போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தில் ஏனைய எதிர்க்கட்சிகளும் பங்கேற்கவுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் அவர் விமர்சித்துள்ளார்.

Post a Comment